ராஜபக்ச அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்!

peoplenews lka

ராஜபக்ச அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்!

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அது தற்போது பிரதான இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது பிற தரப்பினருடன் மோதி நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். நடைமுறையில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அரசுடன் மோத வேண்டும்.

தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நெருக்கடிகளிலிருந்து நாட்டையும் மக்களையும் நாம் காப்பாற்ற வேண்டும் – என்றார்.

மேலும் ,இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More